என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லாரி பறிமுதல்"
தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் நான்கு ரோடு பகுதியில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்திவந்தது தெரியவந்தது.
விசாரணையில் டிரைவர் கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (வயது35) என்பதும் நடுக்காவிரி பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து லாரியை பறிமுதல் செய்து தீபன் சக்கரவர்த்தியை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளன. இதனை பயன்படுத்தி கும்பல் தொடர்ந்து மணல் கடத்தி வருகின்றன.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் க.விலக்கு- கண்டமனூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது டிப்பர் லாரி நிற்காமல் வேகமாக சென்றது.
லாரியை அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். அதிகாரிகளை கண்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். சோதனையிட்டதில் வைகை ஆற்றில் இருந்து மணல் கடத்தியது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்து க.விலக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து முத்தனம்பட்டியை சேர்ந்த டிரைவர் செந்தில் (வயது36), உரிமையாளர் பவுன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு மணல் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்பபடுவதாக புகார் வந்தது. இதையடுத்து ரோந்துப் பணியை தீவிரப்படுத்த போலீசார் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி குமரி மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் நேற்று கொற்றிக்கோடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அவர்கள் சித்திரங்கோடு பகுதியில் வரும்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆற்று மணல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லாரியில் மணல் கொண்டு வருவதற்கான ஆவணங்களை சரிபார்த்தனர். மணல் கொண்டு வருவதற்கான எந்த ஆவணமும் இல்லை. மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். டிரைவர் ராஜேந்திரன் (வயது 54), ரெஜிகுமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் மணல் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டனர். அதில் கொக்கோட்டான் பாறை பகுதியில் இருந்து கொண்டு வருவது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கன்னியாகுமரி ரெயில்நிலையம் பகுதியில் இருக்கும் மணலை எடுத்து இரட்டை ரெயில்வே பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இங்கிருந்து அனுமதியின்றி சில லாரிகள் தனியாருக்கு மணல் திருட்டு தனமாக விற்கப்படுவதாக மணல்கடத்தல்பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து மணல் கடத்தல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு லாரிகளில் மணலை ஏற்றி அருகில் உள்ள தனியார் இடத்தில் கொட்டுவது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 2 லாரிகளையும் பிடித்து கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். #tamilnews
மானாமதுரை வட்டாரத்தில் மணல் திருட்டு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பலரும் வைகை ஆற்றிலும் கண்மாய் பகுதிகளிலும் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருகின்றனர். இரவு 10 மணி முதல் விடிய விடிய மணல் திருட்டு நடந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அனுமதியின்றி சவடு மண் ஏற்றிக்கொண்டு செல்வதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அந்த பகுதியில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது லாரியில் சவடு மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து டிரைவர் வெள்ளைச்சாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் மண் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை அபராதத்துடன் விடுவிக்காமல் பறிமுதல் செய்து அரசின் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதே போல மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்பது பெயரளவிலேயே உள்ளது. எனவே மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திஉள்ளனர்.
காரைக்குடியில் உள்ள திருச்சி பைபாஸ் சாலையில் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற லாரியை நிறுத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பியோடிவிட்டார். இதனைத்தொடர்ந்து லாரியை போலீசார் சோதனையிட்டபோது, அதில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று நேமத்தான்பட்டி பகுதியில் செட்டிநாடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற காளையார்கோவிலை சேர்ந்த திருவளர்செல்வன் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வடக்காத்தான்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் நேமத்தான்பட்டி வழியாக லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைதுசெய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக லாரி ஒன்று மணல் ஏற்றிக்கொண்டு வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதிபெறாமல் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டிவந்த மேல்குமாரமங்களத்தை சேர்ந்த முருகன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி திருவதிகை பாலூர்ரோட்டில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதியில்லாமல் மணல் கடத்தி வந்த 2 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மாட்டுவண்டியை ஓட்டிவந்த ரமேஷ் (35), சக்திவேல் (70) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் அடுத்த கொடுக்கப்பட்டு பெரியாயி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, அதனை ஓட்டி வந்தவர்களிடம் உரிய அனுமதியுடன் மணல் எடுத்துச் செல்லப்படுகிறதா? என விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆடப்பட்டை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் சதீஷ்(வயது 24), வாசு மகன் ஏழுமலை(26) ஆகியோர் என்பதும், லாரிகளில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணல் கடத்தியதாக சதீஷ், ஏழுமலை ஆகியோரை கைது செய்ததோடு, மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
முத்துப்பேட்டையை அடுத்துள்ள கோவிலூரில் கிழக்கு கடற்கரை சாலையில் ரவுண்டானா அருகே முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வரப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நாகை மாவட்டம் தாணிக்கோட்டகத்தை சேர்ந்த ரமேஷ்(வயது22) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரமேசை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன் தினம் இரவு வெள்ளோடு அடுத்த புங்கம்பாடி பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கொண்ட லாரியை நிறுத்தி பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி விசாரணை செய்தார். இந்த லாரியை அரச்சலூரை சார்ந்த பழனிசாமி என்பவர் ஓட்டி வந்தார். சென்னிமலை பகுதியில் குவாரியில் இருந்து மண் எடுத்து வந்ததாகவும் மேட்டுக்கடை பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்வதாகவும் கூறினார்.
மேலும் இந்த லாரியில் இரண்டு பதிவெண்கள் ஒட்டப்பட்டு இருந்தது கண்டு தாசில்தார் அதிர்ச்சி அடைந்தார். தாசில்தார் அலுவலகத்திற்கு லாரி கொண்டுவரப்பட்டது. கிராவல் மண்ணுக்கு அபராதம் விதிக்க கோட்டாச்சியருக்கு பரிந்துறை செய்த தாசில்தார் போலி பதிவெண் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட ரமணியிடம் புகார் தெரிவித்தார்.
இதனடிப்படையில் ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒட்டப்பட்ட இரண்டு எண்களுமே போலியானது என்பதால் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யும்படி வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். லாரியில் உள்ள இரண்டு எண்களுமே போலி என்பதால் வண்டியில் உள்ள சேஸ் நம்பரை வைத்து தான் லாரி உரிமையாளரை அடையாளம் காணும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்